Tipu Sultan - Mudhal Vidudhalai Puli
திப்பு சுல்தான் - முதல் விடுதலைப் புலி

சமீபத்தில் நான் வாசித்த மருதன் எழுதிய திப்பு சுல்தான் புத்தகத்தைப் பற்றிய என் கருத்துக்கள்:
இந்த புத்தகம் திப்பு சுல்தானின் வாழ்க்கையை நம்மிடம் அறிமுகப்படுத்துகிறது. திப்பு சுல்தான் என்ற மனிதரின்/மன்னரின் வாழ்வினை கூறுவதற்கு, தேவையான அத்துனை துணை கதைகளையும் நம் கண்முன் நிறுத்துகிறது. எனினும், இதை படிக்கையில் சில நேரம் ஆங்கிலேயரைப் பற்றியும், ஹைதர் அலி பற்றியும் கூறிய அளவிற்கு திப்பு சுல்தானைப் பற்றி கூறவில்லையோ என்று லேசாக தோன்றுகிறது. அந்த காலத்தில் வெள்ளையர்களின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டிய பெருமை திப்பு சுல்தானுக்கு உண்டு, எனினும் அவரால் கடைசி வரை தாக்கு பிடிக்க முடியவில்லை, ஏனெனில், கூட இருத்தே குழி பறிக்கும் கூட்டம் அவரைச் சுற்றி இருந்தது.
திப்பு சுல்தான் தன் ஆட்சி காலத்தில் ஒரு தொலை நோக்கு பார்வையுடன் செயல்பட்டார். வெள்ளையர்களை நம் மண்ணில் உளவ விட்டால், நாளை நமது உடைமைகள் நமக்கில்லை என்று அவருக்கு தெளிவாக தெரிந்திருந்தது. ஒருவேளை சிறு வயதில் அவருக்கு கற்பிக்கபட்ட மதச் செய்திகள் இல்லாவிடில், அவர் தன் எதிரிகளை சிறப்பாக கையாண்டிருப்பாரோ? திப்பு சுல்தான் ஒரு மிகப்பெரிய புத்தக பிரியராக இருந்திருக்கிரார். அது மட்டும் இன்றி அவர் பெற்றிருந்த அறிவுக் கூர்மையால் பல தொழில் முன்னேற்றங்களை தோற்றுவித்திருக்கிறார். இன்று மைசூர் பட்டுக்கு கிடைக்கும் மவுசு, அவர் தயவில் தான் வந்தது. மிசைல் (missile) எனப்படும் ஏவுகனைகளை இந்திய போர்களில் அந்த காலத்திலேயே பயன்படுத்த்ய சிறப்பு அவருக்கு உண்டு! இந்தியாவின் முதல் "மிசைல் மேன்" இவர்தானோ?
புத்தகம் முழுவதும் திப்பு சுல்தான் செய்த விஷயங்களை விளக்கும் போது, அத்துனை காட்சிகளும் நம் கண்முன் தோன்றுகிறது, எனினும் அதனை முழுமையாக சிலாகிக்கும் முன் வேறு விஷயங்களுக்கு தாவி விடுகிறோம்.திருவாங்கூர் மகாராஜாவிற்கு திப்பு சுல்தான் "கேரள பெண்கள் ஏன் மேலாடை அணிவதில்லை?" என்று கேட்டு எழுதிய கடிதத்திற்கு, மகாராஜா என்ன பதில் அனுப்பினார் என்பது அவ்வளவு தெளிவாக பதிவு செய்யப்படவில்லை, குழந்தையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்ட மறப்பது இதுதானோ?
இந்த புத்தகம் எண்ணற்ற வரலாற்று நிகழ்வுகளை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கிறது. அன்றய திப்பு சுல்தானின் அரசு எவ்வாறு தென் இந்தியாவில் பறந்து விரிந்தது என்பதையும், அதனை எவ்வாறு அவர் காத்து மக்களின் மனம் கோணாமல் நடந்து கொண்டார் என்பதையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது.
இந்த சிறிய புத்தகத்தில் (136 பக்கங்கள்) தேவையான அளவு இரசாயணம் கலந்து, கேப்ஸ்யூல் வடிவில் நாம் விழுங்க கொடுத்ததிற்கு, மருதன், மற்றும் கிழக்கு பதிப்பகத்திற்கு என் நன்றி.
syndicate this site
திப்பு சுல்தான் - மருதன்
மருதன் அவர்களுடைய எழுத்து கோர்வையே தனி தான்! சாதாரண மற்றும் சர்ச்சைக்குரிய விசயத்தையும் சுவைபட சொல்லும் திறமை உடையவர்! விகடனில் வரும் அவரது கட்டுரைகளின் ரசிகன் நான் :) திப்பு சுல்தான் பற்றிய இந்த புத்தகத்தை படிக்கும் ஆவலை ஏற்படுத்தி விட்டீர்கள் :)
திப்பு சுல்தான் பத்தி நிறைய
திப்பு சுல்தான் பத்தி நிறைய கேள்வி பட்டு இருக்கேன் :) ஆனா ஆதாரபூர்வமாக எதுவும் படித்தது இல்லை. இந்த புத்தகத்தை படிக்க ஆர்வமாய் இருக்கேன் :)